இந்தியாவின் 4 நகரங்களில் நாளை முதல் ஜியோ 5ஜி சேவை தொடக்கம்


இந்தியாவின் 4 நகரங்களில் நாளை முதல் ஜியோ 5ஜி சேவை தொடக்கம்
x

Image Courtesy: PTI 

சோதனை அடிப்படையில் 4 நகரங்களில் நாளை முதல் ஜியோ 5ஜி சேவை தொடங்கப்படவுள்ளது.

புதுடெல்லி,

5ம் தலைமுறை தொலைத் தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோதி இந்த சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தசரா பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் 4 நகரங்களில் நாளை முதல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துகிறது. மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் நாளை முதல் சோதனை அடிப்படையிலான 5ஜி சேவையை தொடங்கவுள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 4 நகரங்களில் ஜியோவின் ட்ரு 5G பீட்டா சேவை, 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5ஜி சேவைகளைப் பெற புதிய சிம் தேவையில்லை எனவும் ஜியோ தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மக்கள் வைத்திருக்கும் செல்போன்களில் ஜியோ 5ஜியை இயக்க போன் தயாரிப்பாளர்களுடன் இணைந்து ஜியோ நிறுவனம் பணியாற்றி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற நகரங்களுக்கான 5ஜி சேவை படிப்படியாக சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படும் என ஜியோ அறிவித்துள்ளது.


Next Story