நடப்பு நிதியாண்டின் 2-ம் பாதியிலிருந்து பணவீக்கம் படிப்படியாக குறையும் - சக்திகாந்த தாஸ்


நடப்பு நிதியாண்டின் 2-ம் பாதியிலிருந்து பணவீக்கம் படிப்படியாக குறையும் - சக்திகாந்த தாஸ்
x

நடப்பு நிதியாண்டின் 2-ம் பாதியிலிருந்து, பணவீக்கம் படிப்படியாக குறையும் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியிலிருந்து, பணவீக்கம் படிப்படியாக குறையும் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். மேலும், வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியை அடையும் வகையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில், தொடர்ந்து தேவையான கொள்கை முடிவுகளை ரிசர்வ் வங்கி எடுக்கும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:

நடப்பு நிதிஆண்டின் இரண்டாவது பாதியிலிருந்து, பணவீக்கம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.

குறுகிய கால அளவில், நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணிகள் பணவீக்கத்தை மேலும் பாதிக்கலாம். என்றாலும், நடுத்தர கால அளவில், பணவீக்கத்தின் போக்கு, ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கையால் தீர்மானிக்கப்படும்.

எனவே, பணவியல் முடிவுகள் உரிய நேரத்தில் எடுக்கப்பட்டு, பொருளாதாரத்தை வலுவான மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இடத்தில் வைக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி அதன் கொள்கைகளை வகுத்துக் கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story