ராமாயணத்தை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் - நடிகர் அருண் கோவில்


ராமாயணத்தை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் - நடிகர் அருண் கோவில்
x
தினத்தந்தி 6 Feb 2024 10:28 AM IST (Updated: 6 Feb 2024 10:59 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.

வாரணாசி,

ராமானந்த் சாகர் தயாரிப்பில் உருவான ராமாயணம் தொடர், 1987-ம் ஆண்டில் தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரந்தோறும் ஒளிபரப்பானது. இதில் இந்தி நடிகர் அருண் கோவில் ராமர் வேடத்திலும் நடிகை தீபிகா சீதையாகவும் குத்துச் சண்டை வீரர் தாரா சிங் அனுமனாகவும் நடித்திருந்தனர். அப்போதே, நாடு முழுவதும் கோடிக் கணக்கானோர் இந்தத் தொடரை பார்த்து ரசித்தனர்.

இதனிடையே உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில், கடந்த மாதம் 22ம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவிலில் தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்தநிலையில் வாரணாசியில், ராமாயணத்தில் ராமர் வேடத்தில் நடித்த நடிகர் அருண் கோவில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ராமாயணம் நமது பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். ஏனெனில் ராமாயணத்தை மதமாக பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. நமது வாழ்க்கையின் தத்துவம். எல்லோரும் எப்படி வாழ வேண்டும். உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை ராமாயணம் சொல்கிறது. ஒருவர் எவ்வளவு பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை ராமாயணம் காட்டுகிறது. இது சனாதன மக்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் உரித்தானது என்றார்.


Next Story