ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு லீவு கிடைக்காததால் வேலையை ராஜினாமா செய்த நபர்
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி பல்வேறு மாநில அரசுகள் பொது விடுமுறை அறிவித்தன.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா கடந்த 22ம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. கோவில் திறப்பு விழா மற்றும் பிராண பிரதிஷ்டை நிகழ்வானது நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எல்இடி திரைகள் மூலம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி பல்வேறு மாநில அரசுகள் பொது விடுமுறை அறிவித்தன. ஒருசில தனியார் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு பணிச் சலுகைகளை அறிவித்தன.
இந்நிலையில், ராமர் கோவில் திறப்பு விழா நாளன்று விடுப்பு கிடைக்காததால் ஒரு நபர் வேலையை ராஜினாமா செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வேலை பார்த்த நிறுவனத்தின் பொது மேலாளர் விடுப்பு அளிக்க மறுத்ததால் வேலையை விட்டுவிட்டேன் என அந்த நபர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டனர். சிலர் அவருக்கு வேலை தருவதாக கூறி, தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொண்டனர்.