விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் கைது டெல்லி போலீசார் நடவடிக்கை


விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் கைது டெல்லி போலீசார் நடவடிக்கை
x

மத்திய அரசின் ஆணைப்படி இயங்கும் டெல்லி போலீசாரால், விவசாயிகளின் குரலை அடக்க முடியாது என அவர் தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

புதுடெல்லி,

வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து ெடல்லி ஜந்தர் மந்தரில் இன்று (திங்கட்கிழமை) போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாரதீய கிசான் யூனியன் செய்தி தொடர்பாளரும், சன்யுத் கிசான் மோர்சசா அமைப்பின் மூத்த தலைவருமான ராகேஷ் திகாயத் நேற்று ஜந்தர் மந்தர் சென்று கொண்டிருந்தார்.

அவரை காசிப்பூரில் தடுத்து நிறுத்திய ெடல்லி போலீசார், பின்னர் கைது செய்து மது விகார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கு வைத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு திகாயத் கண்டனம் தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் ஆணைப்படி இயங்கும் டெல்லி போலீசாரால், விவசாயிகளின் குரலை அடக்க முடியாது என அவர் தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

இதைப்போல திகாயத்தின் கைதுக்கு ஆம் ஆத்மி கட்சியும் கண்டனம் தெரிவித்து உள்ளது.


Next Story