ராஜஸ்தான்: உறங்குவதற்காக ரெயில் பெட்டி மீது ஏறிய நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு


ராஜஸ்தான்: உறங்குவதற்காக ரெயில் பெட்டி மீது ஏறிய நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
x

பொக்ரான் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டியின் மீது ஏறிய நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரான் ரெயில் நிலையத்தை மின்மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்த ஜெகதீஷ் என்பவர், நேற்று இரவு உறங்குவதற்காக அங்குள்ள ஒரு ரெயில் பெட்டியின் மீது ஏறியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக ரெயில் பெட்டியின் மேல் சென்ற உயர் அழுத்த மின் கம்பியின் மீது அவரது உடல் உரசியதாக தெரிகிறது. இதனால் ஜெகதீஷின் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உடல் கருகி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், ஜெகதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

1 More update

Next Story