ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்: 5 -ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த பாஜக


ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்: 5 -ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த பாஜக
x

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் 15 போ் கொண்ட ஐந்தாவது பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸும், ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் முனைப்பு காட்டி வருகின்றன. மாநிலத்தில் உள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கட்சி சாா்பில் களம் காணும் 83 போ் கொண்ட முதல் பட்டியலையும், அதனைத் தொடா்ந்து 41 போ் கொண்ட இரண்டாவது பட்டியலையும் வெளியிட்ட பாஜக, நவ.2ஆம் தேதி 58 போ் கொண்ட மூன்றாவது பட்டியலையும், நவ.4ஆம் தேதி 2 பேர் மட்டுமே அடங்கிய 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது.

இந்த நிலையில் சட்டப்பேரவை தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் 15 போ் கொண்ட ஐந்தாவது பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டது. இதில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன், அக்கட்சி இதுவரை மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளில் 198 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய நவம்பர் 6-ம் தேதி கடைசி நாளாகும்.


Next Story