உதய்பூர் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு ஒரு மாதத்தில் தூக்கு: அசோக் கெலாட் உறுதி


உதய்பூர் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு ஒரு மாதத்தில் தூக்கு: அசோக் கெலாட் உறுதி
x

கோப்புப்படம்

நுபுர் சர்மாவுக்கு ஆதரவான கருத்துக்காக தையல்காரரை கொன்றவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் தூக்கில் போடப்படுவார்கள் என்று அசோக் கெலாட் உறுதி அளித்துள்ளார்.

உதய்பூர்,

நபிகள் நாயகத்தை விமர்சித்த பா.ஜனதா முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால், ராஜஸ்தானில் கன்னையா லால் டெலி என்ற தையல்காரர், கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், கன்னையா லால் வீட்டுக்கு முதல்-மந்திரி அசோக் கெலாட் நேற்று நேரில் சென்றார். லால் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கன்னையா லால் கொலை, ஒரு கொடிய செயல். இதை விரைவு கோர்ட்டு விசாரணைக்கு எடுத்துச் செல்வோம். கொலை செய்தவர்கள் ஒரு மாதத்துக்குள் தூக்கில் போடப்படுவார்கள். தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கி விட்டது. அதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்து, ராஜஸ்தான் போலீஸ் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று இவ்வாறு அவர் கூறினார்.


Next Story