டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவுடன் ராஜ் தாக்கரே சந்திப்பு


டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவுடன் ராஜ் தாக்கரே சந்திப்பு
x

மத்திய மந்திரி அமித்ஷாவை மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே நேரில் சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, டெல்லியில் இன்று மத்திய மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே உடனிருந்தார்.

இந்த சந்திப்பின் மூலம் மக்களவை தேர்தலில் மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. மற்றும் மராட்டிய நவநிர்மாண் சேனா இடையே கூட்டணி உறுதியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி உறுதியானால் மராட்டிய தலைநகர் மும்பையில் போட்டியிட நவநிர்மாண் சேனாவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு மும்பை தொகுதியில் குறிப்பிடத்தக்க ஆதரவு உள்ளது. சிவசேனாவில் இருந்து பிரிந்த பிறகு நவநிர்மாண் சேனாவால் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

முன்னதாக வட இந்தியர்கள் தொடர்பாக ராஜ் தாக்கரே தெரிவித்த சில சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story