ஓடும் ரெயிலில் பயணிகள் உள்பட 4 பேரை சுட்டுக்கொன்ற ரெயில்வே காவலர் பணி நீக்கம்


ஓடும் ரெயிலில் பயணிகள் உள்பட 4 பேரை சுட்டுக்கொன்ற ரெயில்வே காவலர் பணி நீக்கம்
x
தினத்தந்தி 17 Aug 2023 10:17 AM IST (Updated: 17 Aug 2023 10:53 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் பயணிகள் உள்பட 4 பேரை சுட்டுக்கொன்ற ரெயில்வே காவலர் சேத்தன் சிங் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

கடந்த ஜூலை 31 ஆம் தேதி ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் ரெயில் நிலையத்தைக் கடந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது ஆர்பிஎப் காவலர் சேத்தன் சிங், தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரெயிலில் இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டார். இதைப்பார்த்த சக பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆனால், அதில் ஆர்பிஎப் காவலர் ஒருவர் மற்றும் மூன்று பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

4 பேரை சுட்டுவிட்டு தஹிசார் ரெயில் நிலையம் அருகே ரெயிலில் இருந்து குதித்து தப்பிக்க முயற்சி செய்த ஆர்பிஎப் காவலர் சேத்தன் சிங்கை அங்கிருந்த காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அந்த வீரரிடம் இருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரெயில்வே பணியில் இருந்து சேத்தன் சிங் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது நீதிமன்றக் காவலில் சேத்தன் சிங் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story