ரெயில் நிலையங்களில் செல்பி பூத் - ராகுல் காந்தி கிண்டல்


ரெயில் நிலையங்களில் செல்பி பூத் - ராகுல் காந்தி கிண்டல்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 31 Dec 2023 4:00 AM IST (Updated: 31 Dec 2023 11:48 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் உழைத்து சம்பாதித்த பணம் செல்பி ஸ்டாண்டு அமைப்பதற்காகவா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்

புதுடெல்லி,

ரெயில் நிலையங்களில் பிரதமர் மோடியின் ஆளுயுர கட்-அவுட்களுடன் கூடிய செல்பி பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது மக்கள் பணத்தை வீணடிக்கும் செயல் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், செல்பி பூத் திட்டத்தை கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "சாதாரண மக்களை பாதிக்கும் வகையில், அனைத்து வகுப்பு ரெயில் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. பிளாட்பாரம் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. முதியோருக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகையும் திரும்பப்பெறப்பட்டுள்ளது. இது தவிர தனியார்மயமாக்கலுக்கான கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.

மக்கள் உழைத்து சம்பாதித்த பணம் செல்பி ஸ்டாண்டு அமைப்பதற்காகவா?

குறைந்த விலையில் சமையல் கியாஸ் மற்றும் எளிதான ரெயில் பயணமா? அல்லது உங்கள் கட்-அவுட்டுடன் செல்பி எடுப்பதா?. மக்களுக்கு எது வேண்டும்" என்று அதில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.


Next Story