மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: கருத்து கூற ராகுல் காந்தி மறுப்பு
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து கருத்து கூற ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்து விட்டார்.
புதுடெல்லி,
மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் அவை கூடியதும், மசோதாவை சட்டத்துறை மந்திரி தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து லோக்சபா நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து கருத்து கூற ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்து விட்டார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்கள் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி , ' சரியான நேரம் வரும் வரை நான் இந்த விவகாரத்தில் கருத்து கூற மாட்டேன்" என்றார்.
Related Tags :
Next Story