வகுப்புவாத உணர்வை தூண்டும் எதிர்க்கட்சிகள் : பஞ்சாப் முதல்-மந்திரி கடும் குற்றச்சாட்டு


வகுப்புவாத உணர்வை தூண்டும் எதிர்க்கட்சிகள் : பஞ்சாப் முதல்-மந்திரி கடும் குற்றச்சாட்டு
x

எதிர்கட்சிகள் வகுப்புவாத உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் பெற நினைப்பதாக பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

சண்டிகர்,

வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டி அரசியல் பலன்களைப் பெறும் எதிர்க்கட்சிகளின் நோக்கம் ஒருபோதும் வெற்றியடையாது என்று பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், "மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆனால், எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயத்துக்காக தேவையில்லாத பிரிவினை முயற்சியில் ஈடுபடுகின்றன. மக்களின் உணர்வுகளை பாதிக்கும் விதமாக செயல்படுவதன் மூலம் நெருப்புடன் அவர்கள் விளையாடுகிறார்கள். அவர்களின் இந்த செயல்பாடுகள் பஞ்சாபின் அமைதியை ஒரு போதும் பாதிக்காது. பஞ்சாபில் துறவிகள், குருக்கள், இஸ்லாம் மத குருக்கள் என அனைவரும் ஒற்றுமையுடனும், அமைதியாகவும் வாழ்ந்து வருகின்றனர். மாநிலத்தின் அமைதியை அரசு பாதுகாக்கும்" என்று பகவந்த் மான் கூறினார்.


Next Story