சர்ச்சையில் சிக்கிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் கார் பறிமுதல்


சர்ச்சையில் சிக்கிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் கார் பறிமுதல்
x

சைரன், அரசு முத்திரையுடன் பெயர் பலகை வைத்து பயன்படுத்திய சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேயில் பயிற்சி உதவி கலெக்டராக இருந்தவர் பூஜா கேட்கர். பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் தனியறை, உதவியாளர், காருக்கு வி.ஐ.பி. எண் போன்ற வசதிகள் கேட்டு அடம்பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவர் மீது எழுந்த புகாரை அடுத்து பூஜா கேட்கர் வாசிமுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையே அவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர், போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ் கொடுத்து ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்ததாகவும் புகார் எழுந்தது. அதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே பூஜா கேட்கர் விதியை மீறி சிவப்பு சைரன், அரசு முத்திரையுடன் பெயர் பலகை வைத்து பயன்படுத்திய சொகுசு காரை புனே போலீசார் பறிமுதல் செய்தனர். 21 முறை சாலை விதிகளை மீறியதற்காக அந்த காருக்கு இதுவரை ரூ.27 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த அபராதம் செலுத்தப்பட்டு விட்டதாகவும் ஆர்.டி.ஒ. அதிகாரி ஒருவர் கூறினார்.


Next Story