சர்வதேச சட்டப்பள்ளி குறித்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதியுடன் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை


சர்வதேச சட்டப்பள்ளி குறித்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதியுடன் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை
x

சர்வதேச சட்டப்பள்ளி குறித்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்

தலைமை நீதிபதியுடன் ஆலோசனை

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி புதுச்சேரி வந்தார். புதுவை கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் தங்கும் விடுதியில் அவரை,புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி, சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.

இந்த சந்திப்பின்போது ஐகோர்ட்டு நீதிபதி ராஜா, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

சர்வதேச சட்டப்பள்ளி

அப்போது அவர்கள், புதுவை காலாப்பட்டில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி அருகே சுமார் ரூ.200 கோடி மதிப்பீட்டில் 25 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள சர்வதேச சட்டப்பள்ளியின் (சட்டப்பல்கலைக்கழகம்) பணிகள் குறித்து கலந்துரையாடினார்கள்.

புதுவையில் மருத்துவ பல்கலைக்கழகம், சட்டப்பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story