காங்கிரஸ் கட்சியில் இணைந்தது ஏன்? - வினேஷ் போகத் விளக்கம்


காங்கிரஸ் கட்சியில் இணைந்தது ஏன்? - வினேஷ் போகத் விளக்கம்
x

போராட்டத்தின்போது பாஜகவைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் தங்களுடன் நின்றதாக வினேஷ் போகத் கூறினார்.

புதுடெல்லி,

அரியானா சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பிரபல மல்யுத்த வீராங்கணை வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். காங்கிரசில் இணைவதற்கு முன்னதாக வினேஷ் போகத் இந்திய ரெயில்வேயில் தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்தார்.

காங்கிரசில் இணைந்தது குறித்து வினேஷ் போகத் கூறியதாவது;

"நான் காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த வருடம் போராட்டத்தின்போது நாங்கள் ரோட்டில் இழுத்து செல்லப்பட்டபோது பாஜகவைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் எங்களுடன் நின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு குரல் கொடுக்கும் ஒரு கட்சியில் சேர்வதை பெருமையாக நினைக்கிறன். சகோதரிகளே, உங்களுக்காக யாரும் இல்லாதபோதும் காங்கிரஸ் கட்சி இருக்கும்." என்று தெரிவித்துள்ளார்.


Next Story