பிரதமர் மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணம் - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்
பிரதமர் மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி,
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி, இந்த வாரம் மேற்கொள்கிற அமெரிக்க சுற்றுப்பயணம், இதுவரை இல்லாத வகையில் உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை அங்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் வினய் குவாத்ரா கூறுகையில், "அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரதமர் ஜூன் 21 முதல் 23 வரை அமெரிக்கா செல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணம் இரு நாடுகளின் நல்லுறவில் ஒரு மிக முக்கிய மைல் கல்லாக அமையும். இரு நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு என்பது பிரதமரின் அமெரிக்க பயணத்தின்போது மிக முக்கியமான விசயமாக அமையும். இது பிரதமரின் முதல் அதிகாரப்பூர்வ அமெரிக்க அரசுப் பயணம் ஆகும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
#WATCH | On PM Narendra Modi's upcoming visit to the US, Foreign Secretary Vinay Kwatra says, "...It's a milestone in our relationship between the two countries...It is a very significant visit, a very important visit. A visit on which there is a genuine and widespread deep… pic.twitter.com/tE0vILRibf
— ANI (@ANI) June 19, 2023