தூய்மை இந்தியாவின் ஒரு பகுதியாக பள்ளியில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி


தூய்மை இந்தியாவின் ஒரு பகுதியாக பள்ளியில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி
x

தூய்மை திட்டத்தின் ஒரு பகுதியாக என்னுடைய இளம் நண்பர்களுடன் ஒருவராக நானும் கலந்து விட்டேன் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடக பதிவில் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி தூய்மை இந்தியா திட்டம் மத்திய அரசால் தொடங்கி வைக்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், புதுடெல்லி விஞ்ஞான் பவனில் தூய்மை இந்தியா தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், காந்தி ஜெயந்தி நாளான இன்று, தூய்மை திட்டத்தின் ஒரு பகுதியாக என்னுடைய இளம் நண்பர்களுடன் ஒருவராக நானும் கலந்து விட்டேன்.

உங்களை சுற்றி உள்ள தூய்மை திட்டத்தின் ஒரு பகுதியாக நீங்களும் மாறுங்கள் என உங்கள் அனைவரையும் நான் கேட்டு கொள்கிறேன். உங்களுடைய இந்த தொடக்கம் ஆனது, தூய்மை இந்தியாவின் மனவுறுதியை இன்னும் வலுப்படுத்தும் என அவர் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பள்ளி ஒன்றில் மாணவ மாணவிகளுடன் ஒன்றாக சேர்ந்து தூய்மை பணியில் அவர் ஈடுபட்டார்.


Next Story