டெல்லியில் தொடக்கப்பள்ளிகள் நாளை முதல் திறப்பு - அரசு அறிவிப்பு
காற்றின் தரம் உயர்வை தொடர்ந்து டெல்லியில் தொடக்கப்பள்ளிகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளன.
புதுடெல்லி,
டெல்லியின் அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகள் எரிப்பு மற்றும் தீபாவளி பட்டாசு காரணமாக காற்று மாசுபாடு அதிகரித்து இருந்தது. இதனால் தொடக்கப்பள்ளிகள் கடந்த 5-ந் தேதி முதல் மூடப்பட்டன. அத்துடன் அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் மாநிலத்தில் காற்றின் தரம் தற்போது உயர்ந்து இருக்கிறது. மேலும் விவசாய கழிவுகளை எரிக்கும் சம்பவங்களும் குறைந்திருக்கின்றன. எனவே மாநிலத்தில் தொடக்கப்பள்ளிகளை நாளை (புதன்கிழமை) முதல் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதைப்போல 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் உத்தரவும் திரும்ப பெறப்பட்டு உள்ளது.
இந்த தகவலை மாநில சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Related Tags :
Next Story