ஜனாதிபதி தேர்தல்: இரண்டாம் சுற்றுமுடிவிலும் திரவுபதி தொடர்ந்து முன்னிலை


ஜனாதிபதி தேர்தல்: இரண்டாம் சுற்றுமுடிவிலும் திரவுபதி தொடர்ந்து முன்னிலை
x
தினத்தந்தி 21 July 2022 3:32 PM IST (Updated: 21 July 2022 5:34 PM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு 2 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டது.

இதில் மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்மு களமிறக்கப்பட்டார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்கா போட்டியிட்டார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. இந்த வாக்குகள் அனைத்தும் எண்ணூம் பணியானது இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்மு 2 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்கள் பதிவு செய்த வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்டுள்ளது. திரவுபதி முர்மு 2,32,400 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

அதன்படி திரவுபதி முர்மு - 3,78,000 வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா- 1,45,600 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்குகளில் 72.19% வாக்குகளை திரவுபதி முர்மு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் சுற்றுமுடிவிலும் திரவுபதி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.


Next Story