அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை சாமி தரிசனம்
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
புதுடெல்லி,
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி சிலை பிரதிஷ்டை விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நாடு முழுவதிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு சென்று பால ராமரை வழிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை (புதன்கிழமை) அயோத்திக்கு செல்கிறார். அங்கு செல்லும் அவர் அயோத்தி ராமர் கோவில், அனுமான் கர்ஹி கோவில்களில் சாமி தரிசனம் உள்ளார். ஜனாதிபதி வருகையையொட்டி அயோத்தியில் பலத்த போலீஸ் போடப்பட்டுள்ளது.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு அயோத்திக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தருவது இதுவே முதல்முறையாகும்.
Related Tags :
Next Story