மிசோரம், சத்தீஸ்கர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்தது


மிசோரம், சத்தீஸ்கர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்தது
x

இரு மாநில தேர்தல்களிலும் 70 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகின.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 20 தொகுதிகளில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.சத்தீஸ்கா் மாநிலத்தில் நாராயண்பூா், தண்டேவாடா, பிஜபூா், கோன்டா, கேன்கா் உள்ளிட்ட 10 தொகுதிகளில் இன்று காலை 7 முதல் பிற்பகல் 3 மணி வரையும், இதர 10 தொகுதிகளில் காலை 7 முதல் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில முதற்கட்டத் தேர்தலில் 70.87 % வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவுக்கு இடையே சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் இன்று தாக்குதல் நடத்தினர். சிறப்பு படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த இந்த தாக்குதலில் 3 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதைப்போலவே, மிசோராமின் 40 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. மிசோரத்திலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 77.04% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story