ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு கூட்டம் பிரயாக்ராஜில் இன்று தொடங்குகிறது


ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு கூட்டம் பிரயாக்ராஜில் இன்று தொடங்குகிறது
x

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் கவுகானியாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 4 நாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ். பிரசார பிரிவு பொறுப்பாளர் சுனில் அம்பேத்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விஜயதசமியையொட்டி மோகன் பகவத் ஆற்றிய உரையில், தாய்மொழி வழிக்கல்வி, மக்கள்தொகை சமச்சீரின்மை, சமூக நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எழுப்பினார். அவை குறித்து இந்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். வருகிற 2025-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ்.சின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்.

தற்போது நாட்டில் 55 ஆயிரம் இடங்களில் செயல்படும் இந்த அமைப்பை ஒரு லட்சம் இடங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story