மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு வழங்கப்பட்டது.
புதுடெல்லி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ( 72) சுவாச தொற்று பாதிப்பு ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கடந்த 12ம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில், டெல்லியில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், மதுரையில் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் வரை கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்திய குழுவின் இடைக்கால ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் காரத் தேர்வு செய்யப்பட்டார்.
சி.பி.ஐ.எம். மூத்த தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் காரத், 2005 முதல் 2015 வரை கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். 1985 -ல் மத்திய குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 1992ம் ஆண்டு அரசியல் குழு உறுப்பினரானார்.