பிரக்யான் ரோவர் தனது பணியை செய்துவிட்டது - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
நிலவில் பிரக்யான் ரோவர் எதிர்பார்த்தபடி தனது பணிகளை செய்துவிட்டது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
காந்திநகர்,
குஜராத் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சோமநாதர் ஆலயத்தில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று வழிபாடு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் 'எக்ஸ்-ரே போலாரிமீட்டர்' செயற்கைகோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ தயாராகி வருவதாக தெரிவித்தார்.
தற்போது நிலவில் உறக்க நிலையில் வைக்கப்பட்டுள்ள பிரக்யான் ரோவர் குறித்து அவர் கூறுகையில், "நிலவில் இரவு நேரத்தில் வெப்பநிலை மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் அளவாக இருக்கும். இதன் காரணமாக ரோவரின் மின்னணு பாகங்கள் சேதமடையவில்லை என்றால் அது மீண்டும் விழித்துக்கொள்ளும்.
இருப்பினும் பிரக்யான் ரோவர் நிலவில் எதிர்பார்த்தபடி தனது பணிகளை சிறப்பாக செய்துவிட்டது. எனவே அது மீண்டும் விழிக்கவில்லை என்றாலும் பிரச்சினை இருக்காது" என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story