ராஜ் தாக்கரேக்கு அறுவை சிகிச்சை தள்ளிவைப்பு


ராஜ் தாக்கரேக்கு அறுவை சிகிச்சை தள்ளிவைப்பு
x

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேக்கு மேற்கொள்ள இருந்த அறுவை சிகிச்சை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே சமீபத்தில் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தார். மேலும் இந்த வாரத்தில் அயோத்தி சென்று ராமரை வழிபட இருப்பதாக தெரிவித்தார். பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக அயோத்தி பயணத்தை தள்ளிவைப்பதாக அறிவித்தார்.

இந்தநிலையில் அவருக்கு இடுப்பு எலும்பில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அறுவை சிகிச்சைக்காக நேற்று மும்பை லீலாவதி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு இன்று காலை இடுப்பு எலும்பு அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்தது. முன்னதாக எடுக்கப்பட்ட பரிசோதனையில், அவரது ரத்தத்தில் உயிரிழந்த கொரோனா தொற்றுக்கள் இருந்தது கண்டறியப்பட்டது. எனவே அவருக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை அடுத்த வாரத்திற்கு டாக்டர்கள் தள்ளிவைத்தனர். இதன் காரணமாக ராஜ்தாக்கரே அறுவை சிகிச்சை செய்யாமலேயே ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். இந்த தகவலை அவரது கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

மும்பையில் சமீப நாட்களாக கொரோனா அதிகரித்து வரும் நிலையில், ராஜ்தாக்கரேவுக்கு தொற்று கண்டறியப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story