சூரத் விமான நிலையத்தில் ரூ.25 கோடி தங்கம் கடத்தலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது
இந்த தங்கம் கடத்தலில் உடந்தையாக செயல்பட்டதாக போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சூரத்,
குஜராத் மாநிலம் சூரத் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 7-ந்தேதி 3 பயணிகள், கழிவறையில் எதையோ மறைத்து வைக்க முயற்சிப்பதை சோதனை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அப்போது பசை வடிவில் 48.2 கிலோ தங்கம் பிடிபட்டது. இதன் மதிப்பு ரூ.25 கோடியாகும். இது தொடர்பாக பயணிகள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து, வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது இந்த தங்கம் கடத்தலில் உடந்தையாக செயல்பட்டதாக போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விமான நிலைய குடியேற்ற அலுவலகத்தில் பணியாற்றிய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பராக் தேவ், அதிகாரிகளின் சோதனையில் இருந்து மறைத்து தங்கத்தை கடத்தி செல்வதற்காக கழிவறையில் மறைத்து வைக்க உதவியதாக தெரியவந்ததால் கைது செய்யப்பட்டார். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வருவாய் புலனாய்வு பிரிவு காவலில் வைக்கப்பட்டார். இது தொடர்பாக அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில், ரூ.12 லட்சத்துக்கான வங்கி காசோலை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்