புதிதாக 6 வந்தே பாரத் ரெயில்கள்: சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி


புதிதாக 6  வந்தே பாரத் ரெயில்கள்: சேவையை தொடங்கி வைத்தார்  பிரதமர் மோடி
x

பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக இன்று 6 வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

ரான

ஜார்க்கண்ட் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி, புதிதாக 6 வந்தே பாரத் ரெயில்களின் சேவையை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி துவங்கி வைத்த ரெயில்கள் கீழ் கண்ட வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

டாடாநகர்-பாட்னா,

பிரம்மபூர்-டாடாநகர்,

ரூர்கேலா-ஹவுரா,

தியோகர்-வாரணாசி,

பாகல்பூர்-ஹவுரா

கயா-ஹவுரா

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது

புதிய வந்தே பாரத் ரயில்கள் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளன. தினமும் ரயில்களில் சென்று வரும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு சொகுசான வசதி அளிக்கும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. வேகமான பயணம், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறந்த வசதிகள் ஆகியவற்றை தரும் நோக்கத்துடன் இந்த ரெயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது வரை 54 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது புதிதாக 6 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது.


Next Story