பா.ஜ.க. அரசு மீண்டும் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் - பிரதமர் மோடி பேட்டி


பா.ஜ.க. அரசு மீண்டும் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் - பிரதமர் மோடி பேட்டி
x
தினத்தந்தி 31 Jan 2024 10:52 AM IST (Updated: 31 Jan 2024 11:10 AM IST)
t-max-icont-min-icon

கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கவுள்ளது. தற்போதைய 17-வது மக்களவையின் கடைசி நாடாளுமன்றக் கூட்டம் இதுவாகும்.

இந்தநிலையில், டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களைத் தாண்டி நாடு முன்னேறி வருகிறது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இன்று ஜனாதிபதி உரை, நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் இது மகளிருக்கான சக்தி.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாடாளுமன்றத்தில் விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும்.

கடைசி கூட்டத்தொடர் என்பதால் இதை யாரும் புறக்கணிக்க வேண்டாம். நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவோரை வரலாறு நினைவில் வைத்திருக்காது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது மகத்தான சாதனை. குடியரசு தின விழா அணிவகுப்பில் பெண்களின் வலிமை குறித்து பறைசாற்றப்பட்டுள்ளது.

மக்களவைத்தேர்தலுக்குப்பின் பா.ஜ.க. அரசு மீண்டும் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.மக்களின் ஆசியுடன் இந்த பயணம் தொடரும், இவ்வாறு அவர் பேசினார்.


Next Story