நாக்பூர் விமான நிலையத்தில் விமானி மயங்கி விழுந்து உயிரிழப்பு


நாக்பூர் விமான நிலையத்தில் விமானி மயங்கி விழுந்து உயிரிழப்பு
x

Image Courtesy : ANI

மாரடைப்பு ஏற்பட்டு விமானி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூர் விமான நிலையத்திற்கு நேற்று தனியார் நிறுவனமான 'இண்டிகோ' விமானத்தின் 40 வயது விமானி மனோஜ் சுப்பிரமணியன் பணிக்கு வந்தார். அவர் நாக்பூர்- புனே இடையேயான விமானத்தை இயக்க இருந்தார்.

இந்த நிலையில் விமான நிலையத்தில் போர்டிங் கேட் அருகே வந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது.

1 More update

Next Story