கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை
கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் அவ்வப்போது கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கேரளாவில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பத்தனம்திட்டா, இடுக்கி மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சூர் மற்றும் பாலக்காடு தவிர மற்ற மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடற்கரையோரங்களில் கடல்நீர் ஊடுருவல் குறித்து கடலோர குக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். கனமழை பெய்யும் போது மக்கள் இரவு நேரங்களில் ஹைரேஞ்ச் வழியாக பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பாழடைந்த வீடுகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.