அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு
நாடாளுமன்ற வியூகம் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தினர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற கட்டிடத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
காங்கிரஸ், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, சமாஜ்வாடி, சிவசேனா (உத்தவ்), திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரீய ஜனதாதளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, புரட்சி சோஷலிஸ்டு கட்சி, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
பெரும்பாலானோர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். நாடாளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய வியூகம் குறித்து விவாதித்தனர். அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story