மத்திய பிரதேசத்தில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளின்படி திறந்த வெளியில் முட்டை, மாமிசம் விற்க தடை
முதல்-மந்திரியாக பதவியேற்ற மோகன் யாதவ் தலைமையில் முதல்-அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
போபால்,
மத்திய பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்ற நிலையில், மாநிலத்தின் முதல்-மந்திரியாக மோகன் யாதவ் பதவியேற்றார். இவரது தலைமையில் முதல்-அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், உணவு பாதுகாப்பு விதிமுறைகளின்படி மாநிலம் முழுவதும் திறந்த வெளியில் முட்டை, மாமிசம் ஆகியவற்றை விற்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொதுமக்களிடம், மாநில அரசின் உணவுத்துறை சார்பில் முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story