பஞ்சாபில் 'ஒரே எம்.எல்.ஏ. ஒரே ஓய்வூதியம்' சட்ட மசோதா - மாநில கவர்னர் ஒப்புதல்


பஞ்சாபில் ஒரே எம்.எல்.ஏ. ஒரே ஓய்வூதியம் சட்ட மசோதா - மாநில கவர்னர் ஒப்புதல்
x

‘ஒரே எம்.எல்.ஏ. ஒரே ஓய்வூதியம்’ சட்ட மசோதாவிற்கு பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தின் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, 'ஒரே எம்.எல்.ஏ. ஒரே ஓய்வூதியம்' என்ற பெயரில் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரே ஓய்வூதியம் வழங்கும் சட்ட திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த மசோதாவிற்கு பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாவின் மூலம், ஒரு சட்டமன்ற உறுப்பினர் எத்தனை முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு ஒரே ஒருமுறை மட்டுமே ஓய்வூதியம் வழங்க வழிவகை செய்யப்படுகிறது.

சட்டமசோதாவுக்கு கவர்னரி ஒப்புதல் கிடைத்த தகவலை முதல்-மந்திரி பகவந்த் மான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் பொதுமக்களின் வரிப்பணம் மிகப்பெரிய அளவில் மிச்சமாகும் என அவர் கூறியுள்ளார். இந்த மசோதா மூலம் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கு ரூ.19.53 கோடி மிச்சமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story