தாஜ்மகாலின் அடித்தளத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை - தொல்லியல் துறை விளக்கம்


தாஜ்மகாலின் அடித்தளத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை - தொல்லியல் துறை விளக்கம்
x

தாஜ்மகாலின் அடித்தளத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று மத்திய ஜல் சக்தி அமைச்சகம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

புதுடெல்லி,

தாஜ்மகாலின் அடித்தளத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று மத்திய ஜல் சக்தி அமைச்சகம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. தொல்பொருள் ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ள தகவலின் படி, தாஜ்மகாலின் அடித்தளத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை, உறுதியாக உள்ளது என்று கூறியுள்ளது.

ஜல் சக்தி துறை இணை மந்திரி கூறுகையில், உத்தரபிரதேசத்தில் யமுனை ஆற்றின் மேலே ஒரு அணை கட்டுவதற்கான முன்மொழிவு உருவாக்கப்பட்டுள்ளது. தாஜ்மகாலுக்கு அருகாமையில் இந்த அணை கட்டமைக்கப்பட உள்ளது.

அணை கட்டுவதற்கு உத்தரபிரதேச அரசு மற்றும் ஆறு துறைகளில் இருந்து அனுமதி கிடைத்துள்ளது. நீர் வழி பாசனத் துறை, மத்திய நீர் ஆணையம், இந்திய தொல்லியல் துறை, தாஜ் பகுதி மாசு கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஆகிய துறைகளில் இருந்து அனுமதி கிடைத்து விட்டது என்று கூறியுள்ளது.

மாநில சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு குழுவிடமிருந்து இன்னும் அனுமதி பெறவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.


Next Story