வெறுப்பு பேச்சு; அரசியல் கட்சிகளை ரத்து செய்ய அதிகாரம் இல்லை-தேர்தல் ஆணையம்


வெறுப்பு பேச்சு; அரசியல் கட்சிகளை ரத்து செய்ய அதிகாரம் இல்லை-தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 15 Sept 2022 8:34 AM IST (Updated: 15 Sept 2022 8:34 AM IST)
t-max-icont-min-icon

வெறுப்பு பேச்சில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை ரத்து செய்ய அதிகாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

அரசியலில் வெறுப்பு பேச்சுகளை தடுக்கக் கோரி பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வினிகுமார் உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அளித்த பதில்மனுவில், 'வெறுப்பு பேச்சில் ஈடுபடும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவோ, அவ்வாறு பேசுவோரை தகுதிநீக்கம் செய்யவோ தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. ஆனால் தேர்தல் நேரங்களில் இதுபோன்ற வெறுப்பு பேச்சுகளை தடுக்க இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவுகளையும் தேர்தல் ஆணையம் பயன்படுத்திவருகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story