மரத்திற்கு ராக்கி கட்டிய நிதிஷ் குமார்.. சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு


மரத்திற்கு ராக்கி கட்டிய நிதிஷ் குமார்.. சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு
x

சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், மரத்திற்கு ராக்கி கட்டினார்.

பாட்னா,

ரக்ஷா பந்தன் பண்டிகையை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் மரத்திற்கு ராக்கி கட்டினார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு மரத்திற்கு ராக்கி கயிறு கட்டியதுடன், மரக்கன்றுகளையும் அவர் நட்டார்.

இந்த நிகழ்வில் அவருடன் பீகார் துணை முதல் மந்திரிகள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் இருந்தனர். இதுகுறித்து முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பீகாரின் பசுமையை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மாநில அரசு 2012-ம் ஆண்டு முதல் ரக்ஷா பந்தன் பண்டிகையை 'பீகார் விருக்ஷ் சுரக்ஷா திவாஸ்' ஆக கடைபிடித்து வருகிறது. நாம் மரங்களை நட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். மரக்கன்றுகளை நடுவதில் மாநில அரசு கவனம் செலுத்துகிறது. மாநிலத்தில் சுற்றுச்சூழல் சுற்றுலாவை அரசு ஊக்குவித்து வருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story