நிதாரி பாலியல், கொலை வழக்கு: மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரும் விடுதலை- அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு


நிதாரி பாலியல், கொலை வழக்கு: மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரும் விடுதலை- அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு
x

நிதாரி பாலியல், கொலை வழக்கு: மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அலகாபாத்,

உத்தரபிரதேச மாநிலம் நிதாரி பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் கடந்த 2006-ம் ஆண்டு சிறுமிகள் உள்பட 19 பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

தீவிர விசாரணையில் தொழில் அதிபர் மொகிந்தர் சிங் பாந்தர் என்பவர் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து வீட்டி்ல் புதைத்தது தெரியவந்தது.

இதனையடுத்து தொழில் அதிபரையும், அவரது உதவியாளர் சுரேந்திர கோலி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை கடந்த 2017-ம் ஆண்டு விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு, இருவருக்கும் மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து 2 பேரும் அலகாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பு கூறினார்.


Next Story