அனைவருக்கும் கல்வி கிடைக்க செய்வதே தேசிய கல்வி கொள்கையின் நோக்கம் மத்திய கல்வி மந்திரி தகவல்
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில், தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
கொல்கத்தா,
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில், தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியதாவது:-
தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அவர்கள் கல்வியை தொடருவதை உறுதி செய்யவும் விரும்புகிறது. தொடக்க கல்வியில் இருந்து உயர் கல்வி வரையான இந்திய கல்வியின் எதிர்காலம்தான் தேசிய கல்வி கொள்கை. ஒரு தனிநபரை எல்லாவிதத்திலும் முன்னேற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. அனைவருக்கும் கல்வி கிடைக்க செய்வதும் இதன் நோக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story