நேரு கொண்டு வந்த 'சட்டப்பிரிவு 370' தான் காஷ்மீர் பிரச்சினைக்கு காரணம்- அமித்ஷா


நேரு கொண்டு வந்த சட்டப்பிரிவு 370 தான் காஷ்மீர் பிரச்சினைக்கு காரணம்- அமித்ஷா
x

Image Tweeted By @BJP4Gujarat

மோடி பிரதமரான பிறகே சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் நாட்டோடு முழுமையாக இணைக்கப்பட்தாக அமித்ஷா பேசினார்.

காந்திநகர்,

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கொண்டு வந்த சட்டப்பிரிவு 370 தான், ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்குக் காரணம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விமர்சித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370- கடந்த 2019- ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலத்தையும் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய பா.ஜ.க அரசு பிரித்தது.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவின் கவுரவ யாத்திரையை அமித் ஷா ஜன்சார்கா நகரில் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-க்கு ஒப்புதல் அளித்தது அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு செய்த மிகப் பெரிய தவறு. இதன் காரணமாகவே அங்கு குழப்பம் உருவானது. இதனால், அந்தப் பகுதியை நாட்டோடு முறையாக ஒருங்கிணைக்க முடியாத நிலை இருந்து வந்தது.

ஒவ்வொருவருமே சட்டப்பிரிவு 370-ஐ நீக்க விரும்பினார்கள். ஆனால், நரேந்திர மோடி பிரதமராக வந்ததை அடுத்தே ஒரே அடியாக சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் நாட்டோடு முழுமையாக இணைக்கப்பட்டது" என்று அவர் பேசினார்.


Next Story