3 மாநில சட்டசபை தேர்தல் முன்னணி நிலவரம்..!


3 மாநில சட்டசபை தேர்தல் முன்னணி நிலவரம்..!
x

மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி முன்னிலை உள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுக்காப்புடன் 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான முன்னணி நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, * நாகாலாந்தில் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 43, காங்கிரஸ் கூட்டணி1, என்.பி.எப் 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

* மேகாலயா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 6, காங்கிரஸ் 6, என்.பி.எப் 23, மற்றவை 24 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மேகாலயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை.

* திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 27, கம்யூனிஸ்ட் கூட்டணி 20, திப்ரா 11 இடங்களில் முன்னிலை வகின்றன.


Next Story