மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்: போலீசார் விசாரணை


மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்: போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 April 2024 12:49 AM IST (Updated: 16 April 2024 1:26 AM IST)
t-max-icont-min-icon

கரை ஒதுங்கிய மர்ம பொருள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகே கீழமூவர்க்கரை மீனவ கிராமத்தில் நேற்று முன்தினம் காலை சுமார் 10 அடி அகலம் கொண்ட மிகப்பெரிய மர்ம பொருள் கரை ஒதுங்கியது. இதனை அறிந்த மீனவர்கள் உடனடியாக கடலோர காவல்குழும போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் கரை ஒதுங்கிய மர்ம பொருள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் அந்தப் பொருள் கடலில் தடை செய்யப்பட்ட பகுதி என்பதை அடையாள படுத்துவதற்காக மிதக்க விடும் பொருள் என தெரியவந்துள்ளது. இதை போயா என அழைக்கின்றனர். இந்தப் பொருள் எங்கிருந்து அடித்து வரப்பட்டது என பூம்புகார் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பொருளை பொதுமக்கள் திரண்டு வந்து ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.


Next Story