மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு வரலாறு காணாத வகையில் உயர்வு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு வரலாறு காணாத வகையில் உயர்வு
x

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு வரலாறு காணாத வகையில் 79 ஆயிரம் புள்ளிகளாக உயர்வடைந்து உள்ளது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதன்படி, முதன்முறையாக 79 ஆயிரம் புள்ளிகளை தொட்டுள்ளது. இதேபோன்று நிப்டி குறியீடும் உச்சம் தொட்டுள்ளது.

சென்செக்ஸ் குறியீடு 339.51 புள்ளிகள் உயர்ந்து, 79,013.76 புள்ளிகளாக இருந்தது. நிப்டி குறியீடு இதுவரை இல்லாத வகையில் 97.6 புள்ளிகள் உயர்ந்து, 23,966.40 புள்ளிகளாக இருந்தது.

சென்செக்ஸ் குறியீட்டில் அல்டிராடெக் சிமெண்ட், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பஜாஜ் பைனான்ஸ், கோடக் மகிந்திரா வங்கி மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன.

எனினும், மாருதி, டெக் மகிந்திரா, எச்.சி.எல். டெக்னாலஜீஸ் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகிய ஆசிய பங்கு சந்தைகளில் வர்த்தகம் பெரிய அளவில் முன்னேற்றம் காணவில்லை.


Next Story