சிக்கிமில் தேசிய நெடுஞ்சாலையில் 32 கி.மீ. தூரத்திற்கு நிலச்சரிவு - வாகன போக்குவரத்து முடக்கம்


சிக்கிமில் தேசிய நெடுஞ்சாலையில் 32 கி.மீ. தூரத்திற்கு நிலச்சரிவு - வாகன போக்குவரத்து முடக்கம்
x

கிழக்கு சிக்கிம் பகுதியில் பெய்த கனமழையில் சிங்டம் மற்றும் ராங்போ இடையே பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

காங்க்டாக்,

சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கிழக்கு சிக்கிம் பகுதியில் பெய்த கனமழையில் சிங்டம் மற்றும் ராங்போ இடையே பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சுமார் 32 கிலோமீட்டர் நீளத்திற்கு மண் மற்றும் பாறை போன்றவை சரிந்து விழுந்துள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலை எண்-20 மூடப்பட்டு காங்க்டாக் நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

ஒரே வாரத்தில் இந்த பகுதியில் 2-வது தடவையாக நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இதே சாலையில் சிலிகுரி செல்லும் வழியில் 30 கி.மீ. தூரத்திற்கு நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு உள்ளன. மேலும் பல நிலச்சரிவுகள் காரணமாக பாக்யாங் மற்றும் பாண்டம் வழியாக செல்லும் மாற்று வழிகளும் பல இடங்களில் தடைபட்டுள்ளன. இதனால் எல்லா வழிகளும் அடைபட்டதால் வாகனங்கள் ஆங்காங்கே முடக்கப்பட்டு உள்ளன.


Next Story