ஆசியாவின் பணக்கார நபர் ; அதானியை பின்னுக்கு தள்ளி அம்பானி மீண்டும் முதலிடம்


ஆசியாவின் பணக்கார நபர் ; அதானியை பின்னுக்கு தள்ளி அம்பானி மீண்டும் முதலிடம்
x

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் உயர்ந்ததால் அவரது சொத்து மதிப்பு அதிகரித்து முதலிடம் பிடித்துள்ளார்.

ஆசியாவின் பணக்கார நபர் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதில், கடந்த சில மாதங்களாக இந்தியாவின் பெரும் தொழில் அதிபர்களான அதானி மற்றும் முகேஷ் அம்பானி போட்டா போட்டி நிலவுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை கவுதம் அதானி பிடித்து இருந்தார்.

இந்த நிலையில், மீண்டும் இந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானி முதல் இடம் பிடித்துள்ளார். முகேஷ் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் உயர்ந்ததால் அவரது சொத்து மதிப்பு அதிகரித்து முதலிடம் பிடித்துள்ளார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 99.8 பில்லியன் டாலராக ( ரூபாய் மதிப்பில் சுமார் 7.74 லட்சம் கோடி) உள்ளது. கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 98.7 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

சர்வதேச அளவில் எலான் மஸ்க் 227 பில்லியன் டாலர் சொத்து மதிப்புகளுடன் முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் ஃபோசாஸ் 149 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். இந்தியாவின் முகேஷ் அம்பானி இந்தப் பட்டியலில் 8-வது இடத்திலும் கவுதம் அதானி 9 ஆம் இடத்திலும் உள்ளனர்.


Next Story