மத்தியபிரதேசத்தில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலால் 2 ஆயிரம் பன்றிகள் சாவு
மத்தியபிரதேசத்தில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலால் 2 ஆயிரம் பன்றிகள் இறந்துள்ளன.
போபால்,
மத்தியபிரதேசத்தின் ரேவா நகரில் 2 வாரங்களுக்கு முன் பன்றிகள் சாகத் தொடங்கின. அதையடுத்து, அவற்றின் மாதிரிகளை போபாலில் உள்ள அதிக பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்துக்கு கால்நடைத்துறை அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.
அதில் அந்த பன்றிகளை ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதித்திருப்பது உறுதியானது. இந்த நகரில் 2 வாரங்களுக்கு உள்ளாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பன்றிகள் இந்த நோயால் இறந்துள்ளன. அவற்றின் உடல்களை நகராட்சி அதிகாரிகள் அழித்தனர்.மேலும், பன்றிகளை எடுத்துச்செல்வதற்கும், அவற்றையும், அவற்றின் இறைச்சியையும் விற்பனை செய்வதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
Related Tags :
Next Story