மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
Live Updates
- 10 Aug 2023 1:40 PM IST
இந்தி திணிப்பு எதிர்க்கிறோம் பெயரில் இந்தி, சமஸ்கிருதம் கற்க கூடாது என்கிற திணிப்பு உள்ளது-நிர்மலா சீதாராமன்
இந்தி திணிப்பு எதிர்க்கிறோம் பெயரில் இந்தி, சமஸ்கிருதம் கற்க கூடாது என்கிற திணிப்பு உள்ளது. நீங்கள் தமிழை வளர்க்கும் அதிகாரம் இருக்கும் போது சமஸ்கிருதம், இந்தியை படிக்க கூடாது என தடுக்க அதிகாரம் இல்லை- -
- 10 Aug 2023 1:31 PM IST
சுதந்திரம் வழங்கிய போது தனக்கு வழங்கப்பட்ட செங்கோலை கைத்தடியாக பயன்படுத்தினார் நேரு: நிர்மலா சீதாராமன் விமர்சனம்
- 10 Aug 2023 1:27 PM IST
மணிப்பூரில் பெண்கள் அவமதிக்கப்பட்டதாக கூறுபவர்கள் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை அவமதித்தவர்கள்தான்; நிர்மலா சீதாரமன் திமுக மீது கடும் விமர்சனம்
- 10 Aug 2023 1:00 PM IST
மதுரை எய்மஸ் கட்டுமான பணி தாமதத்திற்கு காரணம் தமிழக அரசுதான்; நிர்மலா சீதாராமன்
- 10 Aug 2023 12:38 PM IST
பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு பதிலுரை
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. இந்த தீர்மானத்தின் மீது இன்று 3-வது நாளாக மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. நிர்மலா சீதாராமன் தற்போது விவாதத்திற்கு பதிலளித்து வருகிறார். பிரதமர் மோடி இன்று விவாதத்திற்கு பதிலளிப்பார் என முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில், இன்று மாலை 4 மணிக்கு பிரதமரின் பதிலுரை தொடங்கும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன
- 10 Aug 2023 12:31 PM IST
2013 ஆம் ஆண்டில் உலகின் ஐந்து பலவீனமான பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா இருந்தது. ஆனால் 9 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசின் கொள்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது- நிர்மலா சீதாராமன்
- 10 Aug 2023 12:16 PM IST
நம்பிக்கையில்லா தீர்மானம்: 3 வது நாளாக மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்து வருகிறார்
- 10 Aug 2023 11:29 AM IST
எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.