மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி


மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
x
தினத்தந்தி 10 Aug 2023 11:01 AM IST (Updated: 10 Aug 2023 8:40 PM IST)
t-max-icont-min-icon

மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.


Live Updates

  • 10 Aug 2023 6:07 PM IST

    பிரதமர் மோடியின் பேச்சுக்கு இடையே மணிப்பூர்... மணிப்பூர்... என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம்

    நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதாவது:-

    கடந்த 70 வருடங்களாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் உறங்கிக் கொண்டிருக்கிறது.

    எதிர்க்கட்சிகளுக்கு எந்த இலக்கும் கிடையாது;இந்தியாவை காங்கிரஸ் எப்போதும் நம்பியது இல்லை.

    இந்தியாவுக்கு எதிரான அனைத்தையும் காங்கிரஸ் உடனடியாக பற்றிக்கொள்ளும்.

    தொலைநோக்கு சிந்தனை காங்கிரசில் இல்லை.

    பிரதமர் மோடியின் பேச்சுக்கு இடையே மணிப்பூர்... மணிப்பூர்... என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்

  • பிரதமர் மோடியின் பேச்சை உன்னிப்பாக  கவனிக்கும் ராகுல்காந்தி...!
    10 Aug 2023 6:05 PM IST

    பிரதமர் மோடியின் பேச்சை உன்னிப்பாக கவனிக்கும் ராகுல்காந்தி...!

    பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றி வரும் நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மக்களவைக்கு வருகை தந்துள்ளார். பிரதமர் மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரையாற்றி வரும் நிலையில், அதனை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு அவையில் அமர்ந்துள்ளார் ராகுல் காந்தி.

  • 10 Aug 2023 6:01 PM IST

    3-வது முறையாக நாங்கள் ஆட்சியமைக்கும்போது, உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும்- பிரதமர் மோடி

    நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதாவது:-

    தங்களின் தேவையை யார் நிறைவேற்றுவார்கள் என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

    கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்.

    கடந்த 3 நாட்களாக எதிர்க்கட்சிகள் என்னை மிக மோசமாக விமர்சித்தார்கள். விமர்சனம் செய்வதில் மிக கீழ் தரமான நிலையை எதிர்க்கட்சிகள் எட்டியுள்ளன;எதிர்க்கட்சிகளின் வசை மொழிகளை, வாழ்த்துகளாக எடுத்துக் கொள்கிறேன்.

    எல்ஐசி குறித்தும் எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்தார்கள், ஆனால் தற்போது எல்ஐசி சிறப்பாக இயங்குகிறது.

    சிலர் இந்தியாவை மீண்டும் பாதாளத்தில் தள்ள முயற்சிக்கின்றனர்.மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்ததால் தான், எங்களுக்கு மீண்டும் வாய்ப்பளித்தார்கள்;

    அதல பாதாளத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை நாங்கள் மேலே கொண்டு வந்துள்ளோம்.ஊழலற்ற இந்தியாவை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

    3வது முறையாக நாங்கள் ஆட்சியமைக்கும்போது, உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும்.

    2028 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சிகள் எங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும்போது இந்தியா பொருளாதாரத்தில் 3-வது இடத்தில் இருக்கும்.

  • முக்கிய மசோதாக்கள் கொண்டு வரும்போது எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன - மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு
    10 Aug 2023 5:30 PM IST

    முக்கிய மசோதாக்கள் கொண்டு வரும்போது எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன - மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு

    மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றி வருகிறார் அதில்,

    மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளையும் முடக்கி வருகின்றன. மக்களவையில் 3 நாட்களாக விவாதங்களை கவனித்து வருகிறேன்.

    இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன். முக்கிய மசோதாக்கள் கொண்டு வரும்போது எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. நாட்டின் வளர்ச்சியில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை. இந்திய நாட்டின் இளைஞர்களை பற்றி எதிர்க்கட்சிகளுக்கு கவலை இல்லை.

    மத்திய அரசு கொண்டு வந்த பல மசோதாக்கள் நாட்டின் வளர்ச்சிக்காக நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்கள் எங்கள் ஆட்சியின் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளனர்.

    2024-ம் ஆண்டு தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும். எவற்றில் எல்லாம் அரசியல் செய்யக்கூடாதோ அவற்றில் எல்லாம் அரசியல் செய்கிறார்கள். எதிர்க்கட்சிகளுக்கு மக்களின் மீது அக்கறை இல்லை. அதிகாரத்தின் மீதே ஆசை.

    எதிர்க்கட்சிகள் ‘நோ பால்’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.நாங்கள் சதம் மற்றும் சிக்ஸ் அடித்துக் கொண்டிருக்கிறோம்; ஒருமுறை ‘நோ பால்’ போட்டால் பரவாயில்லை, நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப ‘நோ பால்’ போடுகிறார்கள் என்றார்.

  • நாடாளுமன்றத்தை முடக்குவது ஆளுங்கட்சி தான் - திமுக எம்.பி.,சிவா
    10 Aug 2023 4:47 PM IST

    நாடாளுமன்றத்தை முடக்குவது ஆளுங்கட்சி தான் - திமுக எம்.பி.,சிவா

    திமுக எம்.பி.,திருச்சி சிவா நாடாளுமன்றம் வெளியே செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

    மணிப்பூர் பற்றி விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை. நாடாளுமன்றத்தை முடக்குவது ஆளுங்கட்சி தான். பன்முகத்தன்மை கொண்ட நாட்டை ஒற்றைத் தன்மையாக மாற்ற நினைக்கும் பாஜகவுக்கு தமிழ்நாடு மக்கள் ஆதரவு தர மாட்டார்கள். இரும்புக் கோட்டை மீது எறியப்பட்ட பட்டாணிகளைப் போல திமுக மீதான பாஜகவின் குற்றச்சாட்டு முனை மழுங்கிப் போகும் என்றார்.

  • மணிப்பூர் விவகாரம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி; மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
    10 Aug 2023 4:41 PM IST

    மணிப்பூர் விவகாரம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி; மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

    கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் கலவரம் தொடர்பாக தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், நாடாளுமன்ற தலைமை தேர்தல் ஆணையர், இதர ஆணையர்களை நியமிக்கும் குழுவிலிருந்து தலைமை நீதிபதியை நீக்கும் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்ய எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கடும் முழக்கம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து. மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் நாளை காலை 11 மணிக்கு மீண்டும் நாடாளுமன்ற மாநிலங்களவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 10 Aug 2023 3:21 PM IST

    பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வருகை

    பா.ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிலளிக்க உள்ளார்.

    மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி மாலை 4 மணியளவில் உரையாற்றுகிறார்.இதற்காக தற்போது பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து உள்ளார்.

  • 10 Aug 2023 1:55 PM IST

    "சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை அவமதித்த தி.மு.க.வினர், பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசலாமா?" - நிர்மலா சீதாராமன் ஆவேசம்

    "சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை அவமதித்த தி.மு.க.வினர், பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசலாமா?" - நிர்மலா சீதாராமன் ஆவேசம்

    திரவுபதி பாண்டவர் சபையில் அவமானப்படுத்தப்பட்டார் என தி.மு.க. எம்பி கனிமொழி நேற்று  பேசியதற்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்

  • 10 Aug 2023 1:48 PM IST

    மக்களவையிலிருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு...!

    நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போதுஅவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க. எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

  • 10 Aug 2023 1:41 PM IST

    1989 மார்ச் 25-ந் தேதி ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்த கட்சி திமுக- நிர்மலா சீதாராமன்


Next Story