ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு


ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி:  மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
x

மணிப்பூர் சம்பவம் குறித்து விவாதிக்க வலியுறுத்திய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

புதுடெல்லி,

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு திங்கள் கிழமை காலை 11 மணிக்கு மாநிலங்களவைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விவாதம் நடத்த அமைச்சர் பியூஷ் கோயல் கோரிக்கையை முன்வைத்தார். இதனை எதிர்க்கட்சிகள் நிராகரித்தனர். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்கக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளி காரணமாக மாநிலங்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து அவைத்தலைவர் ஜெகதீப் தன்கார் உத்தரவிட்டார்.


Next Story