பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் - மாயாவதி


பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம்  - மாயாவதி
x

பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுக்கு வாக்களித்து தங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம் என மாயாவதி கூறியுள்ளார்.

ஜம்மு

ஜம்மு காஷ்மீரில் 2-ம் கட்ட சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் நாளை மறுநாள் (1-ம் தேதி) 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 3-வது இறுதி கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. இந்தநிலையில்,

காஷ்மீரில் பா.ஜனதா தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து களத்தில் நிற்கிறது. மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து போட்டியிடுகிறது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுக்கு வாக்களித்து தங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தள பதிவில் அவர் பதிவிட்டுள்ளதாவது:-

அரியானாவில் நடந்துகொண்டிருக்கும் சட்டசபை தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதான காங்கிரசின் தொடர்ச்சியான புறக்கணிப்பும், அவமதிப்பும் புலப்படுகிறது. இது தொடர்ந்தால், எதிர்காலத்தில் என்ன நடக்கும்? இதுபோன்ற சூழலில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் காங்கிரஸ், பாஜக போன்றவற்றுக்கு வாக்களித்து அதை வீணாக்க வேண்டாம்.

எப்பொழுதும் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் காங்கிரஸ் தலைவர்கள் இப்போது நேரத்திற்கு ஏற்றாற்போல இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவோம் எனப் பேசுகிறார்கள். எனவே, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களையும் பாதுகாப்பையும், அரசியலமைப்பு உரிமைகளையும் வழங்கப் போராடும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அவர்கள் வாக்களிக்க வேண்டும்.

மேலும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் காங்கிரஸ், பாஜக அல்லது வேறு எந்த கூட்டணிக் கட்சிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம், தலித்துகள் நலன்கள், உரிமைகளை பாதுகாத்து அவர்களுக்கு அரசியலமைப்பு உரிமைகளை வழங்க போராடி வரும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களியுங்கள் என பதிவிட்டுள்ளார்.


Next Story